சிந்தனைக் களம்#chennaicarrentals #carrentalinchennai
கண் தெரியாத மக்கள் இன்றைக்கு முழுவதும் படிப்பறிவு பெற காரணமாய் இருந்த லூயிஸ் பிரைல் வாழ்க்கை நமக்கு பெரும் உத்வேகத்தையும் தன்னம்பிக்கையும் ஊட்டும். சின்னஞ்சிறு வயதில் லூயிஸ் பிரைல் ஒரு ஊசியால் தோல் ஒன்றைத் தைக்க முயலும் போது ஊசி கண்ணைக் குத்திவிட்டது. #monthlycarrentalinchennai மருத்துவர் பலரிடம் காண்பித்தும் பலன் இல்லை. ஒரு கண்ணில் பார்வை இழந்த சிறுவன் இன்னொரு கண்பார்வையையும் நாளடைவில் இழந்து விட்டான். இனி வாழ்நாள் எல்லாம் இருளில் வாழ வேண்டிய நிலையை உணர்ந்து கொண்டான். ஐம்புலன்களில் ஒன்று போனாலும் மற்ற புலன்களைப் பயன்படுத்தி அறிவாற்றலைச் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினான். வெளி உலகத்தை நன்கு தெரிந்து கொண்டான். பார்வை இல்லாததால் பள்ளியில் எழுத்துக்களை அவனால் பயில முடியவில்லை. யோசித்து பார்த்து அவன் ஆசிரியர் ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு குச்சியில் எழுத்து வடிவம் செய்து #லூயிஸ் அதை தொட்டுணர்ந்து கற்றுக் கொள்ளச் செய்தார். பத்து வயதானபோது பாரிஸில் இருந்த பார்வையற்றோர் பள்ளிக்கு லூயிஸ் சென்றான். அங்கே ஒரு பெரிய புத்தகம் இருந்தது. கையால் தொட்டுப்பார்த்து எழுத்துக்களைப் படித்தான். இப்படி சில புத்தகங்களைப் படித்ததோடு வேறு புத்தகங்களையும் கேட்டான். அங்கு வேறு புத்தகங்கள் இல்லை. அப்படி புத்தகம் உருவாக்கும் செலவும் அதிகமாக இருந்தது.#chennaicarrentalservice
#லூயிஸ் பார்வையற்று இருந்தபோது பியோனா வாசிக்கத் தெரிந்து கொண்டான். #carrentalschennai ஒருநாள் ராணுவ கேப்டன் ஒருவர் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு வந்தார். அவர் இரவில் இருளில் எழுதிப் படிக்கிற ஒரு முறையை அந்த ஆசிரியர்களுக்கும் பார்வையற்றவர்களுக்கும் எடுத்து காட்டினார். புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டு ஒரு மரப்பலகையில் இரவு எழுத்து முறையை உருவாக்கி இருந்தார். அவரது படைவீரர்கள் இருட்டிலும் கூட தகவலைப் படிப்பதற்கு அந்த முறை பயன்பட்டது. இதே முறையில் பார்வையற்றவர்கள் கூட படிக்க முடியும். புள்ளிகளைக் தொட்டுப் பார்த்து #பள்ளிமாணவர்கள் படித்து மகிழ்ந்தனர். #carrentalsinchennai
ஆனாலும் இந்த முறையில் பல இடர்பாடுகள் இருப்பதை லூயிஸ் புரிந்து கொண்டான். தனக்கென்று புதிய முறையை உருவாக்க உறுதிகொண்டான். மரப்பலகையில் துளைகள் இட்டு எழுத்து முறையை உருவாக்கிய அந்தக் கேப்டனின் யோசனையை பயன்படுத்தி ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டான். அவனுடைய முயற்சியில் வெற்றி பெற்ற போது அவனுக்கு வயது 15.
#லூயிஸ் பிரைல் கண்டுபிடித்த இந்த முறை, உலகம் முழுவதுமுள்ள பார்வையற்றோர் எழுத்தறிவு மற்றும் வாசிப்பு திறன் பெற உதவியது.#chennaitravels
இரண்டு கண்கள் பறி போன நிலையில் தானொரு குருடன் என்ற தாழ்வு மனப்பான்மை வந்திருந்தால், இனிமேல் படிக்க முடியாது என்று நினைத்திருந்தால், தன்னம்பிக்கைத் தடைபட்டு போயிருக்கும் இல்லையா?
வாழ்க்கையில் முன்னேற்றமும் வெற்றியும் கண்டு, சாதனை புரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் தன்னம்பிக்கைக்கு எதிரான தடைகளைத் தகர்த்து எறிந்து விட்டுத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
👤இனிய காலை வணக்கம்☕ www.chennaicarrentals.com
www.madrascarrental.com
Leave a Comment