#chennaicarrentals #carrentalchennai #carrentalinchennaiசிந்தனைக் களம்
மனிதன் பேராற்றல் மிக்கவன் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் அரும் பெரும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். செயற்கரிய செயல்களை செய்யவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். அவர்கள் நடந்து செல்லும் பாதை, அவர்கள் கடந்து செல்லும் பாதை இருள் பூசிய காடாக இருக்கலாம்.
ஒளி பாய்ந்த பாலைவனமாக இருக்கலாம், கரு மேகங்கள் கட்டிதழுவி உறவாடும் மலை முகடாக இருக்கலாம் வானநிலாவைக் கைதொடத் தாவி எழும் அலைகடலாக இருக்கலாம்; இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று சிரமங்களோடு உறவாடிக்கொண்டே செல்கிறார்கள்.
தூரத்தே தென்படும் ஒளிமயமான காலம் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களை இயக்கிச்செல்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்றாலும் அவர்கள் அஞ்சுவதில்லை. முன்னேறு! முன்னேறு! என மனம் ஓயாமல் ஊக்குவிக்கக் கால்களில் ஒட்டியிருக்கும் இரும்புச் சங்கிலிகளை இலவம் பஞ்சுகளாக எடுத்தெறிந்து வெற்றியாளர்களின் பயணம் கம்பீரமாகத் தொடரும். முயற்சி செய்தால் முன்னேறலாம் என்பது தன்னம்பிக்கையாளர்களின் மனத்திரையில் எழுதி வைத்த ஓவிய வாசகம்!
சோர்வும் சோம்பறித்தனமும் அவன் கால்விரல்பட்டு நசுங்கி விடும். சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும், விடாமுயற்சியும் அவன் மனத்தோட்டத்தில் மணம் வீசும், வண்ணப்பூக்களாய் பூத்து குலுங்கி புது அழகு காட்டும். களை எடுத்து, தளை அறுத்துத் தடைகளை உடைக்கும் வீர நெஞ்சம் அவனுக்கு சொந்தமாயிருக்கும். தன்னம்பிக்கை ஒளி பாயும்: தன்னம்பிக்கை கொண்டவர்கள் வெற்றிக்கு வழி தேடுவார்கள், வெற்றியை நேசிப்பார்கள்.
வெற்றிப் பற்றிய கனவு காண்பார்கள். வெற்றியாளர்களின் கதைகளால் அவர்களது மனம் நிரம்பி இருக்கும், வெற்றியாளர்களின் பாதையில் நடைபயில ஆர்வம் ததும்பி வழியும். அவர்கள் செயல் வீரர்களைப்போல் சிந்தித்து, சிந்தனையாளர்களைப்போல செயல்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள்.
| #CARRENTALinCHENNAI | |
| #chennaicarrental | |
| #chennaicarrentals | |
| #chennaicarrentalservice | |
| #carrentalschennai | |
| #carrentalsinchennai | |
| #chennaitravels | |
| #travelsinchennai |
| #carrentalcompanies |
| #toursandtravelsinchennai |
| #monthlycarrentalinchennai |
Leave a Comment